திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி..

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் பல வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது ஜல்லிக்கட்டு போட்டி அனுமதி பெறுவதற்காக கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து அய்யம்பாளையத்தில் அரசு அலுவலர்கள் ஆய்வு செய்து பின்பு அய்யம்பாளையத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 20 நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டிக்காக வாடிவாசல் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கு  அரங்கம் போன்றவைகள் தயார்படுத்தி இன்று (15/02/2019) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும் 500மாடுபிடிவீரர்கள் பங்கேற்றுவுள்ளனர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பாதுகாப்பு பணியில் 2 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்து வாடிவாசலுக்கு அனுப்பி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகளாக தங்கக்காசு வெள்ளிக்காசு மற்றும் சைக்கிள், பீரோ, கட்டில், சேர் மற்றும் சில்வர் பாத்திரங்கள் போன்றவைகள் காளைகளை பிடிக்கும்  வீரர்களுக்கும், சிறந்த காளைகளுக்கும் பரிசாக வழங்கப்பட உள்ளது. அவசர தேவைக்காக 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறையினரும் தங்களது வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!