மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு தடைச்சட்டம் அமலில் உள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் மற்றும் போலீசார் முக கவசம் அணிந்து நிலையில் வெளியில் செல்ல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் மருந்து கடைகளில் முகக் கவசங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அங்கு போதிய முகக்கவசங்கள் இல்லை.
இது தவிர ஒருசில கடைகளில் ரூ. 10-க்கு விற்க வேண்டிய முகக்கவசம், 25 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. இந்த நிலையில் மதுரை மத்திய சிறைச்சாலை நிர்வாகம் முகக் கவசங்கள் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்கான பணியில் தையல் கலை தெரிந்த 30 பெண் கைதிகளும், 10 ஆண் கைதிகளும் ஈடுபடுகின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக 500 முகக் கவசங்கள் என்று இலக்கு நிர்ணயித்து கைதிகள் திறம்பட செயலாற்றி வருகின்றனர்.
இத்தொடர்பாக மதுரை சரக சிறைத்துறை டிஐஜி பழனி கூறிய போது”எங்கள் சிறைக்கூடத்தில் தயாராகும் முகக்கவசங்கள் முதல்கட்டமாக போலீசார் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். அடுத்தபடியாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ரூ10 விலையில் முகக்கவசங்களை பெற்றுச் செல்லலாம்” என்று தெரிவித்தார். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print



















