புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை, ராமேஸ்வரம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் தாலுகா அலுவலகங்கள் முன் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் 4,525 கல்வி துறை ஊழியர்கள், வருவாய்த்துறை பணியாளர்கள் 457 பேர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் 329 பேர், ஊரக வளர்ச்சி பணியாளர்கள் 302 பேர் என 5,911 பேர் பணிக்கு வராமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் மறியலுக்கு முயன்ற 1,387 பெண்கள் உள்பட 2,222 பேரை போலீசார் கைது செய்தனர்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












