ஜாக்டோ ஜியோ போராட்டம் எதிரொலி-வெறிச்சோடி கிடந்த கடையநல்லூர் நகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகம். ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தற்போது தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் ஜேக்டோ ஜியோ போராட்டம் காரணமாக கடையநல்லூர் ஊராட்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடி கிடந்த காட்சி.
அதே போல் தூத்துக்குடி தாலுகா தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் ந.குமாரவேல் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், மா.சுப்பிரமணியன், திரு கணேசன் தமிழக ஆசிரியர் கூட்டணி , பழனிச்சாமி,தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ரூஸ்வெல்ட் அரசு பணியாளர்கள் சங்கம், ஆதி அருமை நாயகம், தமிழக தமிழாசிரியர் கழகம், R.பவுல்ஆபிரகாம், மாவட்டத் தலைவர் TNPTF சிவன்த மிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் செல்வின் ,மாவட்ட தலைவர்TNSOU அண்ணாமலை பரமசிவன், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் பிரான்சிஸ் ஹென்றி, தமிழ்நாடு வணிக வரி பணியாளர் சங்க மாநில செயலாளர் தே. முருகன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, பூசைத்துரை,கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் அந்தோணி பட்டுராஜ், தமிழ்நாடு அரசு பள்ளி தலைமையாளர் சங்கம் சேகர் ,மண்டல செயலாளர் TANTSAC க.அ.துரை கந்தசாமி, சிவஞானம் MUTA,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தூத்துக்குடி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின, இதனால் அரசு அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
அதே போல் உசிலம்பட்டியில் ஆர்டிஓ அலுவலகத்தில் ஜாக்டோஜியோ ஆசிரியர்கள்ää அரசு ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் எழுமலை, டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி போன்ற சுற்றியுள்ள ஆரம்ப பள்ளி, தொடக்கபள்ளி என அனைத்து பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சார்ந்த ஜாக்டோஜியோ ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக், உசிலை.மோகன், அஹமது, தூத்துக்குடி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print

















