கீழக்கரையில் களை கட்டும் விற்பனையில் புதுக்கோட்டை பலா பழங்கள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலா பழ சீசன் துவங்க இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில், புதுக்கோட்டையில் இருந்து பலா பழங்கள், ராமநாதபுரம், கீழக்கரை, உச்சிப்புளி, மண்டபம், ராமேஸ்வரம் பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு சாலையோரங்களில் குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் புதுக்கோட்டை மாவட்டம் ஆவணம் கை காட்டி, கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், வடகாடு, மாங்காடு, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் தித்திக்கும் சுவை மிகுந்த பலாப் பழங்கள் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் தற்போது புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து மினி வேன் மூலம் கீழக்கரை பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு வந்திருக்கும் பலாப்பழங்களை பலாப்பழ பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். பலாப்பழம் ஒன்றுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!