ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நகர் செயலாளர் ஹபீப் முஹமது தம்பி மற்றும் மாநில இளைஞரணி செயலாளரும் நகர் ஆலோசகருமான நைய்னா முகம்மது ஆகியோர் தலைமையில் தாலுகா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவதை பற்றியும் செவிலியர்கள் பணிகளைப் பற்றியும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் விசாரித்து அவர்களுக்கு உணவு பொருள்கள் மற்றும் பழங்கள் வழங்கி அவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்தனர். அதனைத் தொடர்ந்து தலைமை மருத்துவர் ஜவாஹிர் உசைனை சந்தித்து நோயாளிகளின் சிகிச்சை பற்றியும் புதிய மருத்துவமனை கட்டுமான பணிகளை பற்றியும் விசாரித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகர் துணைச் செயலாளகள் ஹசன், பௌசுல் அமீன் , லெப்பை தம்பி, வர்த்தக அணி தலைவர் ஜலாலுதீன் செயலாளர் சாகுல் ஹமீது, இளைஞர் அணி தலைவர் கல்வத்தி, செயலாளர் இல்யாஸ் உறுப்பினர்கள் அப்துஸ்ஸலாம், ஒருங்கிணைப்பாளர் ஹாஜா முகையதீன் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
You must be logged in to post a comment.