திமுக கூட்டணி வெற்றி பெறும்; IUML தேசிய தலைவர் பேட்டி..

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், மணிச்சுடர் சாகுல் ஹமீது இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள தென்காசி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். அப்போது திருமண நிகழ்வை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், திமுக தலைமையிலான கூட்டணி வருகின்ற சட்டப் பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும், திமுக-முஸ்லிம் லீக் இடையே இருப்பது கொள்கை ரீதியான கூட்டணி எனவும் IUML தேசிய தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார்.

 

தென்காசி மாவட்டத்தில், மணிச்சுடர் சாகுல்ஹமீது இல்லத் திருமண விழா கடையநல்லூர் பேட்டை ஜலாலியா மஹாலில் புதன் கிழமை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் IUML தேசிய தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்ததாவது, இஸ்ரேல், ஈரான் போரை உடனடியாக நிறுத்துவதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும். ஐ.நா.சபையும் அது குறித்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். காஸாவில் 16 லட்சம் பேர் புலம் பெயர்ந்து உள்ளனர். ஒரு லட்சம் பேருக்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

 

காஸாவுக்கு ஈரான் உதவுவதாகக் கூறி போர் தொடங்கப்பட்டு உள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. ஓராண்டு காலம் போர் நடந்துள்ளது. இரு நாடுகள் இடையேயான பிரச்சினைகளை உலக நாடுகள் பேசி தீர்வு காண வேண்டும். திமுகவின் கொள்கைகள் முஸ்லிம் லீக்கின் கொள்கையுடன் உடன்பட்டு இருப்பதால் திமுகவுடன் கூட்டணியில் உள்ளோம். அதிமுக கொள்கையும், முஸ்லிம் லீக் கொள்கையும் ஒரு போதும் ஒத்து வராது. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம். மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் எண்ணிக்கை தெரிய வரும். அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம்.

 

வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தொகுதிகள் எண்ணிக்கை தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். திமுக ஒதுக்கும் தொகுதிகளில் போட்டியிடுவோம் என தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநிலச் செயலர் நெல்லை அப்துல் மஜீத், துணைச் செயலர் இப்ராஹிம் மக்கி, தென்காசி மாவட்ட செயலர் செய்யது பட்டாணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!