இராமநாதபுரத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் ஏற்பட்ட மோதலில் பெண்கள் அலறியடித்து ஓட்டம்.. வீடியோ..

இராமநாதபுரத்தில் உலக பெண்கள் முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் மாற்றுத்திறன் பெண்கள் மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா இன்று நண்பகல் 11:00 மணி அளவில் துவங்கியது. அப்போது இக்கூட்டமைப்பில் ஏற்கனவே பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்ட சிலரின் தூண்டுதல் பேரில் விழா மேடை மீது சிலர் ஏறினர். பல்வேறு பெயர்களில் நிறுவனங்கள் ஆரம்பித்து தலா 1,500 ரூபாய் வீதம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் ஒரு கோடிக்கும் அதிகமாக பண மோசடி செய்தாக கூறி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

அப்போது மேடையில் இருந்த பரிசு பொருட்கள், நாற்காலிகள் சூறையாடப்பட்டன. இதனால் அச்சமடைந்த ஆயிரக்கணக்கான பெண்கள் அலறியடித்து அரங்கை விட்டு வெளியேறினர். இதில் மாற்றுத்திறன் பெண்கள் 4 பேர் லேசான காயமடைந்தனர். அரை மணி நேரத்திற்கும் மேலாக பதற்றம் நீடித்தது. தகவலறிந்த பஜார் இன்ஸ்பெக்டர் தனபாலன் தலைமையில் போலீசார் மகாலுக்கு வநது பெண்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். இது தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்டோர் மீது போலீசில் புகார் கொடுக்கப் போவதாக கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!