இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம்!

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த நாராயணனை மத்திய அரசு நியமித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் தலைவராக தற்போது உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணன் கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்.

இவர் திருவனந்தபுரத்தில் வலியமலாவில் உள்ள எல்.பி.எஸ்.சியின் இயக்குனராக பணியாற்றியுள்ளார். வரும் 14ஆம் தேதி இஸ்ரோ தலைவராக நாராயணன் பொறுப்பேற்க உள்ளார். 2 ஆண்டுகள் வரை அந்த பதவியில் அவர் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!