இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என தகவல் வெளியானநிலையில், தங்கள் நாட்டை நோக்கி ஈரான் ஏவுகணை, டிரோன்கள் ஏவியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியது. 100-க்கும் அதிகமான டிரோன்கள் ஈரானிலிருந்து ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்நிலையில், ஈரான் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியதாவது:ஈரானின் நேரடி தாக்குதலுக்கு பல ஆண்டாக இஸ்ரேல் தயாராகி வருகிறது. தற்காப்பு மற்றும் தாக்குதலுக்கு பதிலளிக்க நாடு தயாராக உள்ளது. இஸ்ரேல் அரசு பலமாக உள்ளது. ராணுவம் பலமாக உள்ளது. பொதுமக்கள் பலமாக உள்ளனர். இஸ்ரேலுக்கு யார் தீங்கு விளைவித்தாலும், நாங்கள் அவர்களுக்கு தீங்கு விளைவிப்போம். நாம் ஒரு தெளிவான கோட்பாட்டை வைத்துள்ளோம். யார் நமக்குத் தீங்கு விளைவித்தாலும் நாம் அவர்களுக்குத் தீங்கு செய்வோம். எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக நம்மை தற்காத்துக்கொள்ள அதைத் தலைநிமிர்ந்து, உறுதியுடன் செய்வோம். இஸ்ரேல் குடிமக்களே, நீங்களும் சம நிலையில் உள்ளவர்கள் என்பதை நான் அறிவேன்.ராணுவத்தின் கட்டளையின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன். நாம் ஒன்றாக நிற்போம், கடவுளின் உதவியால், நம் எதிரிகள் அனைவரையும் வெல்வோம். இஸ்ரேலை ஆதரிப்பதற்காக அமெரிக்காவைப் பாராட்டுகிறேன் என்றார்.இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், ஸ்பெயின், நெதர்லாந்து, நார்வே, செக் குடியரசு, பராகுவே, மெக்சிகோ ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









