இஸ்ரேலில் இருந்து தென் மாவட்டத்தை சேர்ந்த மொத்தம் 14 பேர் மதுரை வந்துள்ளனர். இஸ்ரேல் பாலஸ்தீன போரால் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் பொருட்டு மத்திய அரசு ஆபரேஷன் அஜய்த்திட்டத்தின் மூலம் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருகின்றனர்.
இதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேர் 2 கட்டமாக வந்த நிலையில் இன்று மேலும் இரண்டு பேர் மதுரை வந்தடைந்தனர். அவர்களை மதுரை வருவாய்த்துறை தாசில்தார் கோபி வரவேற்றார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வடக்கு தெருவை சேர்ந்த செல்லையா மகன் நடராஜன் வயது 63 இவர் இஸ்ரேல் நாட்டில் ஆறு வருடமாக ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். இதேபோல் திருச்சி புத்தூர் ஹோலி கிராஸ் கான்வென்ட்டை சேர்ந்த ஜோசப் என்பவரின் மகள் டெய்லி மங்கையர்கரசி (வயது58) கிறிஸ்தவ இறைப்பணி செய்து வருகிறார்
கடந்த ஒன்றை வருடமாக இஸ்ரேலில் இருந்த இவர் தற்போது ஆபரேஷன் அஜய்த்திட்டத்தின் மூலம் டெல்லி வந்து டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த இருவரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









