இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -24

( கி.பி 1299-1922)

பேரரசர் முஹம்மது தரைப்படையை தலைமைதாங்கி‌ மதிலின் முன்பகுதியான மேற்குப் பகுதியில்
கோட்டை வாயிலுக்கு எதிரே முகாமிட்டு இருந்தார்.

ஹங்கேரியிலிருந்து
ஒரு பொறியாளரை வரவழைத்து புதிய புதிய ஆயுதங்களை மன்னர் முஹம்மது வடிவமைக்க செய்தார்.

புதிய புதிய ஆயுதங்களை வடிவமைத்து பயன்படுத்துவதில்
மன்னர் முஹம்மதிற்கு அலாதிப்பிரியம்.

ஹங்கேரி பொறியாளர் வடிவமைத்த ஒரு மிகப்பெரிய பீரங்கி அப்போது உலகிலேயே பெரியதாக கருதப்பட்டது.

120 காளை மாடுகள்
அந்த ஒற்றை பீரங்கிகியை இழுத்து சென்றது.
மன்னர் முஹம்மது அவர்கள் இந்த ஆயுதங்களுடன்
கோட்டை சுவருக்கு வெளியே தயாராக இருந்தார்.

கப்பல் படைக்கு மன்னர் முஹம்மதின்
நம்பிக்கைகுரிய தளபதி அப்துல்லா அவர்கள் தலைமை தாங்கினார்.

இவர் மிகச்சிறந்த வீரரும் படையின் வியூகங்களை வகுப்பதில் கைதேர்ந்தவர்.

கோட்டைக்குள்
உள்நுழைந்த வீரர்கள்
கோட்டைக் கதவுகளை
திறக்கும் முன்பே பளீரென விளக்குகள் எரிந்தன.

கோட்டை கதவுகளும்
உடனடியாக திறக்கப்பட்டு துருக்கிய வீரர்கள் வெளிவந்து உஸ்மானிய வீரர்களோடு சண்டையிட துவங்கினார்கள்.

தளபதி அப்துல்லா அப்போது வகுத்த போர்தந்திரம் உஸ்மானிய போர் வரலாற்றில் ஒரு அற்புதமான திட்டம்.

தனது உஸ்மானிய வீரர்களை போரிடாமல் அப்படியே சிறு சிறு தற்காப்புகளை செய்து கொண்டே

முன்புற கோட்டை கதவுகளை நோக்கி ஓடி அந்த கதவுகளை திறக்க ஆணையிட்டார்.

ஆகவே உஸ்மானிய படைகள் தற்காப்பாக போக்கு காட்டிக்கொண்டே முன்புற கோட்டை கதவுகளை அடைந்து அதை அங்கிருந்த வீரர்களோடு,

துரிதமாக போரிட்டு கோட்டை கதவுகளை திறந்து விட்டனர்.
கோட்டைக்கு வெளியே முகாமிட்டு இருந்த மன்னர் முஹம்மதும் உஸ்மானிய தரைப்படையும் உள்ளே புகுந்து போரிட துவங்கினார்கள்.

அப்போது ரோமர்களின் படை மிகவும் பலவீனமாக இருந்தது.

சிலுவை யுத்தங்களில் நிறைய
பொருள்களையும்,
வீரர்களையும் இழந்து இருந்தனர்.

உஸ்மானிய வீரர்கள் கோட்டைக்குள் புகுந்து போரிட்டு முன்னேறுவதை அறிந்த ரோம மன்னர் 16 ஆவது காண்ஸ்டண்டைன்,

தனது தலைநகர்
காண்ஸ்டாண்டி
நோபிள் நகரிலிருந்து
தப்பித்து போப் இருக்கும் ரோம் நகருக்கு செல்ல திட்டமிட்டார்.

மன்னரை தெரிந்தே தப்பிக்க அனுமதித்தார் உஸ்மானிய பேரரசர்
முஹம்மது.

கோட்டை முழுவதும்
உஸ்மானிய வீரர்களால் நிரம்பியது.

சில இடங்களில் கோட்டை சுவர் தகர்க்கப்பட்டது.
சிறு சிறு சண்டைகளாக நடந்து
முழு வீரர்களும் சரணடைந்தனர்.

எல்லோரும் கைப்பற்ற வேண்டும் என்று கனவு கண்ட
காண்ஸ்டாண்டி
நோபிள் என்ற துருக்கியின் தலைநகரான இஸ்தான்ஃபுல் நகரம்
உஸ்மானியர்களால்
கைப்பற்றப்பட்டது.

அதற்கு பிறகு நீண்ட கால உஸ்மானிய பேரரசின் தலைநகராக உலக வரலாற்றை மாற்றி எழுதிய அந்த நகரம் விழாக்கோலம் பூண்டது.

மன்னர் முஹம்மது அல் பாதில் என்ற வெற்றி பெயரோடு
துருக்கியின் அந்த அழகிய அரண்மணைக்குள்
நுழைந்தார்.

மன்னர் முஹம்மது ஆச்சரியத்தால் அப்படியே அசையாமல் நின்றுவிட்டார்.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!