இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -38
( கி.பி.1299-1922)
துருக்கி உஸ்மானிய கிலாபத்தின் பல பகுதிகள் சிதறிப் போயின.
பல பகுதிகளை ஐரோப்பிய நாடுகள் பிடித்து கொண்டன. வியன்னா, ஆஸ்திரியா, சைபீரியா போன்ற நாடுகளை ஐரோப்பிய படைகள் பிடித்து கொண்டன.
இங்கிலாந்து, பிரான்ஸ், போர்த்துகீசியர்கள் என ஐரோப்பிய நாடுகளின் வெற்றிகளும், எல்லைகளும், விரிவடைந்தது. இதனால் உஸ்மானிய பேரரசின் எல்லைகள் குறுகிக் கொண்டே வந்தன.
1495 ஆம் ஆண்டோடு ஸ்பெயினில் கூண்டோடு ஒழித்துக்கட்டப்பட்ட இஸ்லாம், அங்கு ஒரு முஸ்லிம் கூட இல்லாத அளவிற்கு ஒழிக்கப்பட்டனர்.
இஸ்லாமிய ஸ்பெயின்தான் ஐரோப்பியாவின் அறிவு வெளிச்சமாக திகழ்ந்தது.
இருண்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ஸ்பெயின் இஸ்லாமிய ஆட்சியே அறிவு வெளிச்சம் பாய்ச்சியது.
மிகச்சிறப்பாக ஆட்சி செய்த அப்துல்ரகுமான் அவர்கள் தனது மனைவி ஜோஹ்ரா பெயரில் கட்டிய அரண்மனை உலகப்புகழ் பெற்றது.
கல்வி நிலையங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், நீதி பரிபாலனம், ஆட்சியில் அரசியலமைப்பு சட்டங்கள் என நிர்வாகத்தை ஐரோப்பிய நாடுகளுக்கு கற்றுக் கொடுத்தது.
தெருவிளக்குகள், குப்பைத் தொட்டிகள், பொது கழிவறைகள், பொது குளியலறைகள் என சாதாரண மனிதருக்கான தேவைகளையும் பூர்த்தி செய்த இஸ்லாமிய ஸ்பெயின் ஆட்சி அற்புதமானது.
ஸ்பெயினில் இருந்து வெளியேற்றப்பட்ட யூதர்கள் துருக்கி,கொச்சி போன்ற பகுதிகளில் குடியேறினர்.
முஸ்லீம்களும் மொராக்கோ,துருக்கி என பல பகுதிகளில் குடியேறினர்.
கி.பி 1100-1400 காலகட்டங்களில் ஐரோப்பிய மாணவர்கள் மொராக்கோ, ஸ்பெயின்,பாக்தாத் ஆகிய நகரங்களில் இருந்த மிகச்சிறந்த முஸ்லீம்களின் பல்கலை கழகங்களில் அரபியில் பயின்றனர்.
அவர்கள் கற்ற நூல்களை லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தனர். அவைகள் இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸில் மாணவர்களுக்கு போதிக்கப்பட்டன.
சிலுவைப் போர்களுக்காக முஸ்லீம் பகுதிகளில் வந்த கிறிஸ்தவ வீரர்கள் ஏராளமான புத்தகங்களை தங்களுடன் அள்ளிச்சென்றனர்.
அந்த நூல்களை தங்களது தாய் மொழிகளில் மொழிபெயர்த்து அதிலிருந்த ஏராளமான தகவல்களை தெரிந்து கொண்டனர்.
அந்த அறிவு பொக்கிசங்கள் கல்வி கூடங்களில் பாடங்களாக வைக்கப்பட்டு மாணவர்களுக்கு போதிக்கப்பட்டன.
ஐரோப்பாவின் பல கண்டு பிடிப்புகளுக்கும், மறுமலர்ச்சிக்கும் இந்த முஸ்லீம்களின் நூல்கள் பெரும் வழிகாட்டிகளாக திகழ்ந்தன.
உஸ்மானிய மன்னர்களின் சொகுசு வாழ்க்கைகள், நிர்வாக சீர்கேடுகள் உஸ்மானிய மன்னர்களின் குடும்ப சண்டைகள்,
ஷியா ,சன்னி சண்டைகள் கொள்கை முரண்பாடுகள், கொள்கை குழப்பங்கள் என உஸ்மானிய அரசு சரிவுக்குள்ளாகி மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தது.
1840 ஆம் ஆண்டுகளில் உஸ்மானிய பேரரசின் செலவுகளுக்கும், பேரரசின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் ஐரோப்பியாவிடம் கையேந்தி வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு உஸ்மானிய பேரரசு சீரழிந்து போனது.
இதன் உச்சபட்ச கேலிக்கூத்தாக, நாட்டை நிர்வகிக்க வட்டிக்கு கடன் வாங்கலாம் என்று உலமாக்கள் தீர்ப்பளித்தனர்.
உஸ்மானிய பேரரசின் வீழ்ச்சிக்கு வேறு பல காரணங்களையும் அறிந்து கொள்வோம்.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









