இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

*உஸ்மானிய பேரரசு -31

(கி.பி1299-1922)

சுல்தான் இரண்டாவது பயாசித் காலத்தில் கி.பி 1498 ஆம்ஆண்டு வாஸ்கோடகாமா இந்தியாவிற்கான கடல் வழிகளை கண்டுபிடிக்க தனது குழுவினரோடு கிளம்பினார்.

இதற்கு முன்பே கொலம்பஸ் இந்தியாவிற்கான கடல் வழிகளை கண்டுபிடிக்க கிளம்பி அமெரிக்க என்ற நாட்டை கண்டுபிடித்தார்.

அங்கிருந்த பழங்குடிகளுக்கு செவ்விந்தியர் என பெயர் சூட்டினார்.

இப்போது வாஸ்கோடகாமா கிளம்பினார். இதற்கெல்லாம் காரணமாக உஸ்மானியர்களின் கடற்படை வலிமையாக விளங்கியது.

எல்லா கடல் வழிகளிலும் முஸ்லீம்களின் ஆதிக்கமே நிறைந்து இருந்ததால் அதற்கான வரிகளை செலுத்துவதை தவிர்க்க ஐரோப்பியர்கள் புதிய வழிகளை கண்டுபிடிக்க முயற்சித்தனர்.

எகிப்து உலகின் மிக முக்கியமான பருத்தி உற்பத்தியாளராக இருந்தது.ஆனால் எகிப்து உஸ்மானிய ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஆகவே ஐரோப்பிய நாடுகளுக்கு பருத்தி கிடைக்கவில்லை. இந்தியநாடு பருத்தி,பட்டு,கம்பளி, வாசனைப் பொருட்கள் என

ஏராளமான பொருட்களின் சந்தையாக இருப்பதை அறிந்த போர்த்துகீசியர்கள் அதனை தங்கள் நாடுகளுக்கு வாங்கிச் செல்ல நினைத்தனர்.

ஆகவே உஸ்மானிய கடல் எல்லைக்குள் வராமல் இந்தியா வர கடல் வழியை தேடினர்.

இந்தியாவை தேடி கப்பலில் கிளம்பிய கொலம்பஸ் குழுவினர் இந்திய பெருங்கடலில் தடுமாறி நின்றபோது,

அப்துல் மாஜித் என்ற முஸ்லீம் கடலோடி கொலம்பஸ் குழுவினரை கொச்சி துறைமுகத்திற்கு வழிகாட்டி கொண்டு வந்து சேர்த்தார்.

அந்த அளவிற்கு முஸ்லீம்கள் கடல்களின் போக்குவரத்து வழிகளை அறிந்தவர்களாக சிறந்த கடலோடிகளாக இருந்தார்கள்.

கொலம்பஸ் பொருட்களை இந்தியாவில் வாங்கிக்கொண்டு வந்த வழியிலேயே தனது நாட்டிற்கு திரும்பினார்.

இந்தியப் பொருட்களின் மதிப்பை அறிந்து பிரான்ஸ், இங்கிலாந்து, டச்சுக்காரர்கள் என வரிசையாக இந்தியாவை நோக்கி வரத்துவங்கினர்.

இந்த சூழலில் சுலைமான் அல் கானூனி அவர்கள் தங்கள் கடல்படையை நவீனமாக கட்டமைத்தார்.

ஹனபி சட்டம் உஸ்மானிய ‌பேரரசின் சட்ட வழிமுறையாக பின்பற்றப்பட்டது.

இவர் அமைத்த சுலைமானியா பல்கலைக்கழகத்தில் அறிஞர்கள் வாழ்வியல், ஆட்சித்துறை, நிர்வாகத்துறைகளில் காலச்சூழுலுக்கு தகுந்தவாறு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆய்வுகள் செய்து சட்டங்களை வழங்கினார்கள்.

வரி,வரிவசூல், நில சீர்திருத்தங்கள், என்று நிறைய சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. வெளிநாட்டு மாணவர்கள் இஸ்தான்ஃபுல் நகருக்கு அதிக அளவில் வருகை தந்தனர்.

மற்ற நாடுகளுடன் அமைதி ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டார். பேரரசர் சுலைமான் அவர்கள் அதிகம் விட்டுக் கொடுப்பவராகவும், மன்னிப்பவராகவும் இருந்தார்.

இவரை ஐரோப்பியர்கள் “மாட்சிமை தங்கிய சுலைமான்” என்று மிகுந்த மரியாதையுடன் அழைத்தார்கள்.

சுலைமான் அல்கானூனி அவர்கள் பல ஐரோப்பிய நாடுகளை வெற்றி கொண்டார். ஹங்கேரிக்கு படையெடுத்து சென்றார். அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!