இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -27
( கி.பி 1299-1922)
உஸ்மானிய பேரரசு உலகின் பெரும் சாம்ராஜியமாக இருந்தது.
பேரரசர் முஹம்மது அல்பாதில் அவர்களின் மரணத்திற்கு பிறகு அவர்களின் மகன் இரண்டாம் பயாஸித் பதவி ஏற்றார்.
இரண்டாம் பயாஸித் அவர்களின் சகோதரர் அமீர் ஜம்சீத் உஸ்மானியர்களின் பழைய தலைநகரான புருஷாவை தலைநகராக வைத்து தன்னை மன்னராக அறிவித்து கொண்டார்.
இதனையறிந்த மன்னர் இரண்டாம் பயாஸித் அவர்கள் படை ஒன்றை அனுப்பி வைத்தார்.
இதனை அறிந்து அமீர் ஜம்சீத் தப்பிச்சென்று ரோட்ஸ் தீவில் சிலுவை வீரர்களிடம் தஞ்சம் அடைந்தார்.
இதனையறிந்த இரண்டாம் பயாஸித் அவர்கள், தனது சகோதரரை தப்பிவிடாமல் அங்கேயே வைத்து பாதுகாக்க சிலுவைவீரர்களுக்கு கடிதம் எழுதினார். அதற்கு கூலியாக அவர்கள் கேட்ட 40,000 மதிப்பிலான நாணயங்களை வழங்கினார்.
இருப்பினும் அமீர் ஜம்சீத் எப்படியோ தப்பித்து போப்பாண்டவரிடம் சரணடைந்தார்.
இரண்டாம் பயாஸித் அவர்கள் தனது சகோதரரை இனி உயிருடன் விட்டால் குழப்பங்களை ஏற்படுத்துவார் எனக்கருதி போப்பிற்கு 3 லட்சம் நாணயங்களை கொடுத்து அவரை கொன்றுவிட சொன்னார்.
போப்பின் உத்தரவால் அமீர் ஜம்சீத் விஷம் வைத்து கொல்லப்பட்டார்.
இரண்டாம் பயாஸித் பொதுவாக அமைதி விரும்பியாக இருந்தார். ஆரம்ப காலத்தில் போர்களை வெறுத்தார். தற்காப்பு போர்களை மட்டுமே அவசியம் கருதி செய்தார்.
வலிய சென்று மற்ற நாடுகளை இவர் தாக்கவில்லை. ஒருகட்டத்தில் போரிடும் சூழல் உருவானபோது போரின் அழுத்தங்களால் பல நாடுகளை போரிட்டு கைப்பற்றினார்.
மக்கள் மன்னரின் மனநிலையை அறிந்து கொண்டனர். ஆகவே மக்கள் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் இருந்தனர்.
இவருடைய ஆட்சியில் அமைதி நிலவியதால் ஏற்றுமதி வணிகம் மிகச்சிறப்பாக இருந்தது.
ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என எல்லா பகுதிகளின் நாடுகளுடனும், சிறப்பான வணிக உறவுகள் இருந்தன.
தேவையான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியும் செய்தனர். ஆகவே எல்லா பொருட்களும் சீராக எப்போதும் கிடைத்தது.
மிகச்சிறந்த நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்கியதால் நிர்வாகம் சிறப்பாக இருந்தது.
மார்க்க பணிகளில் அறிஞர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மார்க்க பிரச்சாரங்கள் அறிஞர்கள் குழுக்களால் செய்யப்பட்டன.
மஸ்ஜிதுகள்,மதரஸா கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவைகளுக்கு தேவையான எல்லா உதவிகளும் தாராளமாக செய்யப்பட்டன.
இரண்டாம் பயாஸித் பெருமைமிக்க பாக்தாத்தை வெற்றி கொண்டார். ஐரோப்பிய நாடுகள் பலவற்றை வெற்றி கொண்டார்.
அவர் மேலும் போர்களுக்கு தயாரானபோது எதிர்பாராமல் அந்த நிகழ்வு நடந்தது. அதனால் அரண்மனையே ஆடிப் போனது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









