இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -17

( கி.பி 1299-1922)

உஸ்மானிய பேரரசர் பயாசித் தங்களது நாடுகளை அபகரித்துக் கொண்டதாக முஸ்லீம் சிற்றரசர்கள் தைமூரிடம் விண்ணப்பித்தார்கள்

தைமூர் தனது பிரமாண்டமான ஏழு லட்சம் வீரர்கள் கொண்ட படையுடன் பயாசித் மீது படை எடுத்தார்.

தைமூரின் படைகளோடு முஸ்லீம் சிற்றரசர்களும் படையோடு வந்தனர்.

துருக்கியை நோக்கி தைமூரின் படைகள் நகர தலைநகரிலிருந்து தனது 3 1/2 லட்சம் வீரர்களுடன் பயாசித் படையை நடத்திவந்தார்.

தைமூரின் படை முகாமிட்டு இருந்த இடத்திற்கு அரைமைல் தூரத்திற்கு முன்பே தனது படை முகாம்களை அமைக்க பயாசித் உத்தரவிட்டார்.

அன்றைய இரவு நிலவே இல்லாத கருமை சூழ்ந்து இருந்தது.

தனது கூடாரத்தின் அருகில் ஒரு உயரமான நான்கு கால் ஏணி போன்ற அமைப்பை ஏற்படுத்தி மன்னர் பயாசித் அவர்களே அதன் மீதுஏறி தனது பார்வையை நாலாபுறமும் சுழல விட்டார்.

கூடாரங்கள் பெரிதாக இல்லை.சில கூடாரங்களே இருந்தன.

வலது ஓரத்தில் நடுவே தைமூரின் பெரிய கொடியும், அடர்த்தியான படைப்பிரிவுகளுமாக தெரிந்தது.

அங்கிருந்த சூழலில் அது மன்னர் தைமூர் தங்கியிருந்த இடம் என்று பயாசித் யூகித்தார்.

இருப்பினும் மன்னர் படையின் நடுவில் இல்லாமல் வலது ஓரத்தில் கூடாரமும், எந்த ஆடம்பரங்களும் இன்றி தங்கியிருந்தது பயாசித்திற்கு பெரும் ஆச்சரியம் அளித்தது.

வலது ஓரத்தில் இருந்த உயரமான விளக்குகளும், பரபரப்பாக பலர் வருவதில் இருந்தும் அங்கு மன்னர் தைமூரே தங்கி இருக்கிறார் என்பது நிச்சயம் ஆனது.

உஸ்மானிய மன்னர் பயாசித் படையின் அளவை பார்த்து ஆறுலட்சம் வீரர்கள் இருக்கலாம் என எடை போட்டார்.

காலையில் தனது படைகள் எவ்வாறு போரிடவேண்டும் என்று மனதில் ஒரு போர்திட்டத்தை வரைந்தார்.

தனது தளபதிகளை அழைத்து நம்மைவிட தைமூரின் வீரர்கள் ஏறக்குறைய ஒரு மடங்கு அதிகமாக இருக்கிறார்கள்.

இருப்பினும் நாம் துரிதமாக போரிட்டு தைமூரை வளைத்துக் கொண்டால், தைமூரின் படைகளை சரணடைய வைத்து விடலாம்.

ஆகவே படைகள் தைமூர் இருக்கும் வலது ஓரத்தை குறிவைத்தே மொத்தமாக நகர்ந்து தைமூரை வளைத்துக் கொள்ளலாம் என்ற திட்டத்தை எல்லோரும் ஒப்புக் கொண்டார்கள்.

அதேபோல சற்று வலதுபுறமாக திரும்பி உஸ்மானிய முழுப்படையும் ஒரே வேகத்தில் முன்னேறியது.

மன்னர் பயாசித் முதல் வரிசையிலேயே முன்னேறி சென்றார்.

அவரைச் சுற்றி அவரின் மெய்க்காவல் படை வீரர்கள் ஆயிரம் பேர் மன்னரை நாலு புறங்களிலும் பாதுகாப்பாக சூழ்ந்து வந்தனர்.

உஸ்மானிய பயாசித்தின் படைகள் ஒட்டுமொத்தமாக‌ ஒருபுறம் முன்னேறியதால் தைமூரை காணும் தூரத்தில் பயாசித் முன்னேறிவிட்டார்.

அப்போது நடந்த சில நிகழ்வுகள் வரலாற்றை தலைகீழாக மாற்றி விட்டது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!