இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -3

கப்ளிசேட்

உஸ்மானிய பேரரசு -10

(கி.பி.1299-1922)

கிறிஸ்தவ ஐரோப்பிய நாடுகளில் யூதர்கள் கொடுமைப் படுத்தப்பட்டனர்.

ஆகவே யூதர்கள் உஸ்மானிய கிலாபத் பகுதிகளில் வந்து தஞ்சம் அடைந்தனர். உஸ்மானிய முஸ்லீம் அரசு யூதர்களை அரவணைத்தது.

யூதர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தது. யூதர்களுக்கு நிறைய சலுகைகளை செய்து கொடுத்தது.

கிறிஸ்தவ தேவாலயங்கள் பாதுகாக்கப்பட்டன. பாதிரியார்களுக்கு அரசாங்கத்தின் சலுகைகள் வழங்கப்பட்டன.

ஐரோப்பிய கிறித்தவ மன்னர்களின் பகுதிகளில் ஏராளமான வரிகள் வசூலிக்கப்பட்டன.

உஸ்மானிய இஸ்லாமிய ஆட்சியில் வரிவிகிதங்கள் மிகக்குறைவாகவும், எளிதாகவும் இருந்தன.

அதிகாரிகளும் வசூல்களை செய்வதில் கெடுபிடிகள் இல்லாமல் நடந்து கொண்டனர்.

முஸ்லீம்களிடம் ஜகாத் 2.5% எனவும், மற்ற மக்களிடம் ஜிஸியா என்ற பெயரில் ஜகாத்தைவிட குறைவான வரியும் வசூலிக்கப்பட்டன.

ஆகவே உஸ்மானிய கிலாபத்தில் வாழ்ந்த முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும், யூதர்களும் மிக மகிழ்ச்சியில் இருந்தனர்.

முராத்தின் ஆட்சிகாலத்தில் நிறைய கல்வி நிலையங்கள், மஸ்ஜிதுகள், மதரசாக்கள் என ஏராளமான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.

கி.பி.1381 ஆம் ஆண்டில் செர்பியா மற்றும் பல்கேரியா நாடுகள் ஒன்றிணைந்து உஸ்மானிய படையை எதிர்த்து போருக்கு வந்தன.

இந்தப் போரிலும் உஸ்மானிய ராணுவம் மிக எளிதாக வெற்றி பெற்றது.

உஸ்மானிய ராணுவத்தின் சிறந்த தளபதி லாலா சாஹின் மரணமடைந்தார்.

அவருக்கு பதிலாக தளபதியாக தைமூர்தாஸ் பதவி ஏற்றார்.இவர்தான் துருக்கிய உஸ்மானிய கொடியை வடிவமைத்தார்.

உஸ்மானியர்களின் முன்னோடிகளான செல்ஜுக்கியர்களின் கொடியில் இருந்த நட்சத்திரத்தையும், பிறையையும் எடுத்து கொண்டு சிவப்பு கொடியில் பதித்தார். இதுவே துருக்கியர்களின் கொடியாக புகழ்பெற்றது.

குதிரைப்படையை தைமூர்தாஸ் மிக நவீனமாக மாற்றி அமைத்தார். அதிகமான குதிரைகள் வாங்கி பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

உஸ்மானிய ராணுவத்தின் குதிரைப்படை மிக வலுவானதாக இருந்தது.

உஸ்மானிய ராணுவ வலிமையால் ஆசியாவின் பல பகுதிகளையும் ஐரோப்பாவின் பல பகுதிகளையும் கைப்பற்றினார்கள்.

உஸ்மானிய ராணுவத்தின் முன்னேற்றத்தையும் வெற்றிகளையும் அன்றைய நாடுகளால் தடுக்க முடியவில்லை.

மன்னர் முராத்தின் மூத்த மகன் அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டதால் தண்டனை அறிவிக்கப்பட்டு இரண்டு கண்களிலும் பழுக்க காய்ச்சிய இரும்புக்கம்பியை சொருகி இரண்டு கண்களும் குருடாக்கப்பட்டன.

முராத்தின் இளையமகன் பயாசித் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டார்.

கி.பி 1388 ஆம் ஆண்டில் செர்பியா மற்றும் அல்பேனியா நாடுகளின் கூட்டணி படைகள் உஸ்மானிய ராணுவத்தை தாக்கின.

கோசோ என்ற இடத்தில் நடந்த தாக்குதலில் இளவரசர் பயாசித் தலைமையில் உஸ்மானிய படைகள் போரை எதிர்கொண்டன.

இந்தப் போரில் இளவரசர் பயாசித்திற்கு இடி,மின்னல் என்று பெயர் சூட்டப்பட்டது.

அப்படி என்ன நடந்தது??

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!