இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -2

கப்ளிசேட்

அப்பாஸிய பேரரசு -22

(கி.பி 750-1258)

பீட்டர் சந்நியாசி என்று அழைக்கப்பட்ட பாதிரியார் தனது ஆடைகளை கிழித்துக் கொண்டு கிறிஸ்தவர் களிடையே உணர்ச்சிகளை தூண்டும் பேச்சுக்களை பேசிக்கொண்டே வலம் வந்தார்.

புனித பூமியான ஜெருசேலமை மீட்க வாருங்கள் என்று கூக்குரல் எழுப்பினார்.

இதனால் முழு ஐரோப்பிய உலகமும் இந்த போருக்காக திரண்டது.

மேற்கிலிருந்து புறப்பட்ட பன்னாட்டு படைகள் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் முஸ்லீம்களின் பிரதேசங்களுக்குள் புகுந்து அங்கிருந்த முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என இரக்கமில்லாமல் கொன்றனர்.

முஸ்லீம்களின் சொத்துக்கள் கொள்ளை யிடப்பட்டன. வீடுகள் தீ‌வைத்து கொளுத்தப்பட்டன.

அவர்கள் தங்கள் கோபத்தை தணித்துக்கொள்ள அப்பாவி மக்களை பழி தீர்த்தனர்.

கிறிஸ்தவ வீரர்கள் தங்கள் கழுத்திலும், உடையிலும் சிலுவைகளை அணிந்து கொண்டு இதனை புனிதப்போராக பிரகடனப் படுத்தியதால் இவைகள் “சிலுவைப்போர்கள்” என்று அழைக்கப்பட்டன.

முஸ்லீம் அரசர்கள் ஒன்றிணைந்து சிலுவை வீரர்களோடு போர்புரியாததால் முஸ்லீம்களுக்கு ஏராளமான சேதங்கள் ஏற்பட்டன.

பல சமயங்களில் மன்னர்களின் தலைமையிலும், சில சமயங்களில் தலைமையும், கட்டுப்பாடுகளும் இல்லாமலும், சிலுவைப்படை வீரர்கள் நடந்து கொண்டனர்.

ஒன்பது பெரிய முக்கிய சிலுவை யுத்தங்களும், சிறுசிறு யுத்தங்கள் எனவும் 200 ஆண்டுகள் நடந்த இது வரலாற்றில் முக்கிய நிகழ்வாக மாறிப்போனது.

இரண்டாவது சிலுவை யுத்தத்தில் சிரியா டமாஸ்கஸின் ஆட்சியாளர் நூர்தீன் ஜங்கி நேரடியாக போரிட்டார்.

அதனை தொடர்ந்து மூன்றாவது சிலுவையுத்தத்தில் சலாவுதீன் அய்யூபி ஜெருசேலத்தை கிறிஸ்தவர்களிடம் இருந்து கைப்பற்றினார்.

சிலுவைப் போர்களால் பல விளைவுகள் உருவானது.

முஸ்லீம்களைப்பற்றி ஐரோப்பிய உலகில் இருந்த தவறான புரிதல் நீங்கியது.

இஸ்லாமிய உலகின் மத சுதந்திரம் ஐரோப்பிய உலகில் பெரும் மாற்றங்களை உருவாக்கியது.

இஸ்லாமியர்களின் பொருளாதார முன்னேற்றங்கள் ஐரோப்பாவிற்கு பயன்பட்டது.

இந்த போர்களினால் நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்ய ஐரோப்பா முயற்சித்தது.

இஸ்லாமிய உலகின் அறிவுப்புரட்சி ஐரோப்பாவிற்கு மிகவும் பயன்பட்டது.

இஸ்லாமிய பண்பாடுகளும், கலாச்சாரங்களும் மேற்குலகை வசீகரித்தது.

கிழக்கு,மேற்கு தொடர்புகள் வலுப்பெற்றது. நிலப்பிரபுக்களின் பிடிகள் தளர்ந்து அது முடியாட்சியாக மாறியது.

“AJ கிராண்ட் “என்ற வரலாற்று ஆய்வாளரின் கூற்றுப்படி, சிலுவை அரசுகள் அழிந்தன.மீண்டும் இஸ்லாமிய அரசுகள் வலுப்பெற்றன.

ஜெருசலேம் கைப்பற்றப்பட்ட போது அந்த அதிசயம் நிகழ்ந்தது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!