இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -1

கப்ளிசேட்

உமையாக்களின் பேரரசு-4 (கி.பி 661-750)

மத்திய தரைக்கடலின் அந்த கடல்பகுதி திடீரென பரபரப்பாகியது.

தங்களது கப்பலை ரோமக் கப்பல் வரிசையை நோக்கி செலுத்த உத்தரவிட்டார் தளபதி உக்பத் இப்னு நாபீ அவர்கள்.

நெருப்பு அம்புகள் பறந்து வந்ததை லட்சியம் செய்யாத முஸ்லீம்களின் போர் கப்பல்கள் ரோமப்பேரரசின் கப்பல் அணிவகுப்புக்குள் நுழைந்தன.

முஸ்லீம்களின் நூறுகப்பல்கள் ரோமர்களின் ஐம்பது கப்பல்களை சுற்றி வளைத்தன.

அப்போதுதான் ரோமர்களின் கப்பல்படை தலைவருக்கு தனது தவறு புரிந்தது.

தங்கள் அமைச்சரை மீட்க அந்த கப்பலை துரத்தி பிடிப்பதற்கு பதிலாக தேவையில்லாமல் இந்த முஸ்லீம்களின் கப்பல் படையிடம் சிக்கி கொண்டதை அறிந்து மிகவும் வருந்தினான்.

கப்பல்களை காப்பாற்ற உயிருடன் திரும்பிப் போக சமாதானத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்பதை அறிந்து தலைவனின் தலைமை கப்பலில் வெள்ளைக்கொடி ஏற்றினார்கள்.

வெள்ளைக்கொடி ஏற்றப்பட்ட செய்தியறிந்த தளபதி உக்பா அவர்கள் ரோம கப்பல்படை தலைவரை தங்கள் கப்பலுக்கு வரவழைத்தார்.

முஸ்லீம்களின் கப்பலுக்கு வந்த ரோம கடற்படைத் தலைவன் தங்களின் அமைச்சரை மீட்க சக்ரவர்த்தி அனுப்பியதாக கூற,

உங்கள் சக்ரவர்த்தியிடம் போய் இஸ்லாமிய பேரரசிடம் சரணடைய சொல்லுங்கள்.

மிகவிரைவில் இஸ்லாமிய படைகள் ரோமப்பேரரசின் தலைநகரை முற்றுகையிடும்.

அதற்கு முன்பே எங்கள் கலீபா முஆவியா (ரலி) அவர்களிடம் பணியச் சொல் என்று கூறி,

அவர்களை விடுவிக்க ஈட்டுத்தொகையாக பல கப்பல்களை பெற்றுக் கொண்டு அவர்களை விடுவித்தார் தளபதி உக்பா.

ஐரோப்பியாவின் சைப்ரஸ் தீவை நோக்கி முஸ்லீம்களின் கப்பல்படை பயணித்தது.

சைப்ரஸ் தீவு தூரத்தில் தெரிந்தது. அதன் கலங்கரை விளக்க ஒளி காற்றில் மின்னியது. ஏறக்குறைய இரவு மசமசத்து விடியல் நேரம் நெருங்கி இருந்தது.

முஸ்லீம்களின் கப்பல்படை சைப்ரஸ் தீவுக்கு வெகுதூரத்திலேயே நங்கூரங்களை பாய்ச்சியது.

இரவு கவிவதற்காக முஸ்லீம்களின் படை காத்திருக்க துவங்கியது.

தூரத்தில் சைப்ரஸ் துறைமுகம் சிறுபுள்ளியாக மின்னியது.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!