இராமநாதபுரத்தில் அண்ணல் நபி அறிவமுத விழா…

இராமநாதபுரம் மாவட்டம் காரிக் கூட்டம் (வலசை) நகரில் நடந்த அண்ணல் நபி அறிவமுத பெருவிழாவிற்கு காரிக் கூட்டம் முஸ்லிம் ஜமாத் தலைவரும், சக்கரக்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவருமான எஸ்.எம்.நூர் முகமது தலைமை வகித்தார். மலேசியா காரிக் கூட்டம் ஜமாத் தலைவர் கே.அன்வர் கான் மற்றும் ஜமாத்தார், ஹிதாயா இஸ்லாமிய இளைஞர் சங்கத்தினர் முன்னிலை வகித்தனர். மாணவர் முகமது அமீருல் பரீன் பின் எஸ்.சகுபர் இறைமறை குறித்து எடுத்துரைத்தார். காரிக்கூட்டம் இமாம் மவுலவி ஹாபிழ் எம்.ஹிதாயத்துல்லாஹ் நாஃபிஈ வரவேற்றார்.

தூத்துக்குடி மன்பவுஸ் ஸலாஹ் அரபு கல்லூரி பேராசிரியர் மவுலானா மவுலவி ஹாபிழ் அல்ஹாஜ் ஏ.முகமது முஸ்தபா மஸ்லஹி அனைத்து வட்டார உலமாக்கள் வாழ்த்தும் துவாவுடன் இஸ்லாம் பார்வையில் இளமை பருவம் குறித்து சிறப்பு சொற்பொழிவாற்றினார். மவுலவி ஹாபிழ் ஹாஜி உஸ்தாத் முகவை ஜகுபர் சாதிக் ஆலிம் துவா செய்து தொகுத்து வழங்கினார். எஸ். முஹமது அனஸ் நன்றி கூறினார்.

டிச.27 மாலை 6 : 30 மணி முதல் இரவு 8:00 மணி வரை பெண்களுக்கான சிறப்பு பையான் இளையான்குடி ஒளி மலர்கள் ஆலிமாக்கள் குழு நிறுவனர் உஸ்தாதா ஹஜ்ஜா அ.யாஸ்மின் ஆலிமா பொறுப்பேற்று நடத்துகிறார். விழா ஏற்பாடுகளை காரிக் கூட்டம் முஸ்லிம் ஜமாத் மற்றும் ஹிதாயா இஸ்லாமிய இளைஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!