கீழக்கரையில் இரண்டு நாள் ( 02/05/2019 மற்றும் 03/05/2019) மாபெரும் இஸ்லாமிய கண்காட்சி மற்றும் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு விழா..

கீழக்கரையில் மே 2 மற்றும் 3 2019 ஆகிய இரண்டு நாட்கள்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கீழக்கரை தெற்கு கிளை நடத்தும் இஸ்லாமிய கண்காட்சி மதரஸா பட்டமளிப்பு மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சி இஸ்லாமியா பள்ளி விளையாட்டு மைதானம், கிஷ்கிந்தா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மே 2 அன்று முப்பது வகையான கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, ஆண்களுக்கு  மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும், பெண்களுக்கு இரவு 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்வையிட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து மே 3 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை  ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளும்,  மாலை 7.00 மணிக்கு முஹம்மது ஒலி.Misc மலிவானதா? மகத்தானதா? என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார். பின்னர்  இரவு 8.00 மணி முதல் 8.45 மணி வரை தஸ்லீம் மதரஸா மாணவிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்ச்சியும்,  இரவு 9.00 மணிக்கு கோவை ரஹ்மத்துல்லாஹ் ஆஹிரத்தை நோக்கி ஓர் அவசர அழைப்பு என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!