கீழக்கரை இஸ்லாமிய கல்விச் சங்கம் சார்பாக இலவச கபசுர குடிநீர் முகாம்..

இஸ்லாமிய கல்விச் சங்கம் சார்பாக இன்று 24/05/2021 இலவச கபசுர குடிநீர் முகாம் வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

10 மற்றும் 11 வது வார்டுக்குட்பட்ட பிரபுக்கள் தெரு, ஜின்னா தெரு, மதார் அம்பலம் தெரு, அத்திலை தெரு, NMT தெரு, சேரான் தெரு, லெப்பை தெரு, ஆடருத்தான் தெரு, சாலை தெரு ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்த முகாமை சங்கத்தின் தலைவர் ஆலிம் தவ்ஹீத் ஜமாலி தலைமையேற்று நடத்தினார், அல் மத்ரஸத்துர் ராழியாவின் தாளாளர் அஹமத் சுஹைல் துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை சங்கத்தின் பொருளாளர் சல்மான் கான், அஸ்ஃபாக் ஆகியோர் செய்திருந்தனர். சங்கத்தின் உறுப்பினர்கள் ஜமீல், அசிம், முஹைதீன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த முகாமின் மூலம் 2000 க்கும் அதிமாக பொதுமக்கள் பயன்பெற்றனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு (25 மற்றும் 26ம் தேதி) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!