கீழக்கரையில் உள்ள சிறந்த பள்ளிகளில் ஒன்றாக இஸ்லாமியா பள்ளியையும் குறிப்பாக சொல்லலாம். இஸ்லாமியா பள்ளி மாணவ, மாணவிகள் கல்வியில் மட்டுமல்லாமல் பிற செயல்பாடுகளாகிய சமூக விழிப்புணர்வு, விளையாட்டு துறை போன்றவற்றிலும் முத்திரை பதித்த வண்ணமே உள்ளனர். சமீபத்தில் மாநில ரீதியாக நடைபெற்ற போட்டிகளிலும் உள்அரங்கு மற்றும் வெளியரங்கு போட்டிகளில் பல பரிசுகளை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று இஸ்லாமியா பள்ளி மாணவன் ஆகிப் ரஹ்மான் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகள போட்டியி வட்டு எறிதல் போட்டியில் மாநில போட்டிக்கு தகுதி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இப்போட்டியில் ஏழு மாவட்டத்தை சேர்ந்த பதினாறு மாணவர்கள் கலந்து கொண்டனர், இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவன் ஆகிப் ரஹ்மான் 36.58 மீட்டர் தூரம் எறிந்து முதல் இடம் பெற்று அடுத்த மாதம் திருச்சியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.

அயாராத முயற்சி கொண்டு, கடின உழைப்புடன் வெற்றி பெற்ற மாணவனை இஸ்லாமியா பள்ளியின் தாளாளர் எம்எம்கே முகைதீன் இப்ராகிம், பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர். இந்தப் போட்டிக்காக இம்மாணவன் பயிற்சி மேற்கொண்டதும், அதற்கு உற்சாகமும், ஆதரவும் அளித்த பள்ளி நிர்வாகம் நிச்சயமாக பாராட்டுக்குரியது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









