இஸ்லாமிய கல்விச் சங்கம் சார்பாக கபசுர குடிநீர் முகாம்..

இஸ்லாமிய கல்விச் சங்கம் சார்பாக இன்று (19/08/2023) இலவச கபசுர குடிநீர் முகாம் வள்ளல் சீதக்காதி சாலையில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

10 மற்றும் 11 வது வார்டுக்குட்பட்ட பிரபுக்கள் தெரு, ஜின்னா தெரு, , அத்திலை தெரு, NMT தெரு, சேரான் தெரு, லெப்பை தெரு, சின்னகடை தெரு ஆகிய பகுதிகளில் நேரடியாகச் சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

இந்த முகாமை சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர் முஹைதீன் அடுமை தலைமையேற்று நடத்தினார், தலைவர் ஆலிம் முஹம்மது தவ்ஹீத் ஜமாலி துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை சங்கத்தின் நிர்வாகிகள் ஜூல்ஃபிகார் அலி, ஸஃப்வான், ஃபஹத், ரிதுவான் ஆகியோர் செய்திருந்தனர். சங்கத்தின் உறுப்பினர்கள் ஹசன், அசீம் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த முகாமின் மூலம் அதிமாக பொதுமக்கள் பயன்பெற்றனர். தொடர்ந்து நாளையும் (20/08/2023) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மற்ற பகுதிக்கு தேவை உடையவர்கள் 9003739370 / 8270517278 / 6382273264 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!