கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் 12ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி நேற்று (01.12.2024) அல் பய்யினா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை சங்கத்தின் தலைவர் ஆலிம் தவ்ஹீத் ஜமாலி தலைமையேற்று நடத்தினார், சிறப்பு பேச்சாளராக மஸ்ஜித் தக்வா இமாம் ஹஸ்மத் ஃபிர்தவ்ஸி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அல் பய்யினா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ஜாஃபிர் சுலைமான், கடற்கரை பள்ளி ஜமாத் செயலாளர் ஹமீது ஆஸ்கீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த மாதம் 24-11-2024 அன்று மாவட்ட அளவில் மத்ரஸாக்களுக்கான வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் சுமார் 18 மத்ரஸா மாணவ மாணவிகள் கலந்து கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி அன்று காலை நடத்தப்பட்ட ஏனைய போட்டிகளில் 1200ககும் அதிகமான மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர் போட்டியாளர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இணையதளம் மூலம் நடத்தப்பட்ட பொதுமக்களுக்கான கேள்வி பதில் போட்டிக்கான குலுக்களும் நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான பரிசுகளும், மாவட்ட அளவிலான போட்டிகள், மத்ரஸா போட்டிகள் போன்றவற்றுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நிர்வாகிகள் பாசீல் அக்ரம், முகைதீன் அடுமை, அபுதாஹிர், மன்சூர்தீன், மஜ்மஉல் ஹைராத்தியா அறக்கட்டளை பொருளாளர் அய்யூப் கான், மத்ரஸா ஆசிரியர்கள் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஜமாஅத் நிர்வாகிகள், மாணவர்களின் பெற்றோர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் சைஃபுல்லாஹ், அசிம் ரஹ்மான், சுஹைல், ஸஃப்வான், அய்மன், ஃபாதில், ஃபஹத் ஆகியோர் செய்து இருந்தனர். இறுதியாக நிர்வாகி ஃபர்ஹான் அவர்களின் நன்றியுறையுடன் நிறைவுபெற்றது.
You must be logged in to post a comment.