இருமேனியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி..

இன்று இருமேனி கிராமத்தில் டெங்கு நோய் விழிப்புணர்வு ஊர்வலம் இருமேனி அரசு மேல்நிலைப்பள்ளி ஜூனியர் ரெட்கிராஸ் மற்றும் தேசிய பசுமைபாதுகாப்பு படை மாணவ, மாணவியர்களால் நடத்தப்பட்டது.80 மாணவ மாணவியர் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை பள்ளி தலைமையாசிரியர் டேவிட் மோசஸ் தொடங்கி வைத்தார். பள்ளி ஜூனியர்ட் ரெட்கிராஸ் ஆசிரியர் பால முருகன் வழி நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரன் பள்ளி மாணவ மாணவியர்க்கு டெங்கு நோயின் அறிகுறிகள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு பணியில் பொது சுகாதார துறையினருக்கு மாணவ மாணவியரின் ஒத்துழைப்பின் அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும் பொதுசுகாதார சட்டத்தின் படி கொசுப்புழு வீடுகளில் கண்டறிந்தால் குப்பைகளை கண்ட இடங்களில் போட்டாலோ முதல் தடவை 5000 ரூபாய் அபராதம், இரண்டாவது தடவை கண்டறிந்தால் 6மாதம் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என்பதை பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கும் படி வேண்டிக்கொண்டார்.

மாவட்ட மலேரியா அலுவலர் உதயகுமார் டெங்கு கொசுவின் வாழ்க்கை சுழற்சி பற்றி விரிவாக எடுத்துரைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துக்குமார் காய்ச்சல் கண்டால் அரசு மருத்துவமனைகளை நாடுமாறு பெற்றோர்களை கேட்டுக்கொள்ளுமாறு மாணவ மாணவியரடம் அறிவுறுத்தினார்.

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன் இருமேனி கிராமத்தில் கொசுப்புழு கண்டறிந்த வீடுகளை ஆய்வு செய்து பொது சுகாதார துறையின் எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீசை வழங்கி 3நாள்கள் அவகாசம் வழங்கினார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!