அக்கறை இல்லாத கீழக்கரை நகராட்சி… பராமரிப்பதும் இல்லை… மற்றவர்கள் செய்வதை பாதுகாப்பதும் இல்லை..

சில வாரங்களுக்கு முன்பு கீழக்கரையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று அரசாங்கத்தில் முறையான அனுமதி பெற்றும், பல சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பொருளாதார உதவியோடு கீழக்கரை கடற்கரை பகுதியில் எந்திரங்களின் உதவியோடு தூய்மைபடுத்தினர்.

ஆனால் முறைப்படுத்திய சில நாட்களிலேயே நகராட்சி நிர்வாகம் தள்ளு வண்டி மூலம் கொண்டு வரும் குப்பைகளை முறையாக ஓதுக்காமல் சாலையோரத்திலேயே கொட்டி விட்டு செல்வதால், குப்பைகள் சிதறி சுத்தம் செய்யப்பட்ட பகுதி அனைத்தும் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

இது சம்பந்தமாக Kilakarai Tourism நிறுவனர் ரஃபீக் கூறுகையில், “இப்பகுதியை பல்லாயிரம் ரூபாய் தன்னார்வலர்கள் உதவிய தொகையை கொண்டு எந்திரங்களை வைத்து சுத்தம் செய்தோம், ஆனால் சில நாட்களிலேயே நகராட்சியின் கவனக்குறைவால் இது போன்று காட்சியளிப்பது வேதனையளிக்கிறது, நகராட்சி செய்ய வேண்டிய அதிகமான பணிகளை கீழக்கரையில் தனியார் தன்னார்வ நிறுவனங்கள்தான் செய்து வருகின்றன, அவ்வாறு செய்வதை கூட பராமரிக்காமல் நகராட்சி மெத்தனமாக இருப்பது, மிகவும் வேதனையான விசயம்” என கூறி முடித்தார்.

நகராட்சி நிர்வாகம் கண் விழிக்குமா??

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!