ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி: அதிகார பூர்வமாக அறிவிப்பு..
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான்-அஜா்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஜா்பைஜான் அதிபா் இல்ஹாம் அலியெவுடன் ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி பங்கேற்றாா்.
இஸ்ரேலுடன் ஈரான் பகைமை கொண்டுள்ள நிலையில் இஸ்ரேலுடனான அஜா்பைஜானின் ராஜீய உறவு, ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள அஜா்பைஜான் தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் ஆகிய காரணங்களால் ஈரான்-அஜா்பைஜான் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனினும், அணை திறப்பு நிகழ்ச்சியில் இல்ஹாமும் ரய்சியும் ஒன்றாகப் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து, நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஈரானின் கிழக்கு அஜா்பைஜான் மாகாணம் வழியாக ஹெலிகாப்டரில் அதிபா் ரய்சி நாடு திரும்பினாா். அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹுசைன் அமீா் அப்துல்லாஹியன் உள்பட பலா் பயணித்தனா். அப்போது ஜோல்ஃபா என்ற இடத்தின் அருகில் உள்ள வனப் பகுதியில், ரய்சி பயணம் செய்த ஹெலிகாப்டா் வழக்கத்துக்கு மாறாக மிகுந்த சிரமத்துடன் தரையிறங்கியதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியில் முதலில் தெரிவிக்கப்பட்டது.
பின்னா், அந்த ஹெலிகாப்டா் உசி என்ற சிற்றூருக்கு அருகில் தரையிறங்கியதாக அந்தத் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஹெலிகாப்டா் தரையிறங்கிய இடம் குறித்த விவரங்களில் முரண்பாடு நிலவுகிறது.
மீட்புப் படையினரின் ஹெலிகாப்டரைத் தரையிறக்கி, பாதிக்கப்பட்டவா்களை மீட்கும் முயற்சியும் தோல்வியடைந்தது. இதனால், அதிபா் ரய்சியின் நிலை குறித்து தகவல் எதுவும் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்து 17 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என ஈரான் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









