ஈரான் அதிபர் மறைவையொட்டி இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிப்பு! அரைக்கம்பத்தில் பறக்கும் தேசிய கொடிகள்..

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜான் எல்லை அருகே உள்ள அணைகள் திறப்பு விழா நிகழ்வுக்கு சென்றிருந்தார். இந்த நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போது ரைசியின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.ஈரான் அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் என்ன ஆனது என பல மணிநேரம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஆளில்லா டிரோன்கள் மூலம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியான் உள்ளிட்ட 8 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.ஈரான் அதிபர் ரைசியின் மரணத்துக்கு பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்திருந்தனர்.இதனிடையே மறைந்த ஈரான் அதிபர் ரைசிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ‘இந்தியா’ முழுவதும் துக்க தினம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி நாட்டில் அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!