டெல்லிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில், கொல்கத்தா அணி இமாலய வெற்றி..

ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் கொல்கத்தா- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்தது.கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நரேன் 85 ரன்களும் ரகுவன்ஷி 54 ரன்களும் விளாசினார். இறுதியில் வந்த ரஸல் 46 ரன்களும் ரிங்கு சிங் 26 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டும் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும் வீழ்தினர்.இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. பிரித்வி ஷா 10, மிட்செல் மார்ஷ் 0, அபிஷேக் போரல் 0, டேவிட் வார்னர் 18 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் டெல்லி அணி 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.இதனையடுத்து கேப்டன் ரிஷப் பண்ட் – டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தனர். இந்த நிலையில் சக்கவர்த்தி வீசிய ஓவரில் இருவரும் ஆட்டமிழந்தனர். பண்ட் 55 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 54 ரன்னில் வெளியேறினர்.அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும் ஸ்டார்க், வைபவ் அரோரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!