நெல்லையில் நடைபெறவிருக்கும் பன்னாட்டு கருத்தரங்கத்திற்கு பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அழைப்பு..

நெல்லை அரசு அருங்காட்சியகமும், பொதிகை தமிழ்ச்சங்கமும் இணைந்து பல்வேறு தமிழ்மொழி வளர்ச்சிப்பணிகளில் தொடர்ந்து சிறப்பாக கடமையாற்றி வருகிறது. அந்த வகையில் பொதிகைத் தமிழ்ச் சங்கம் மற்றும் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும் இணைந்து வரும் ஜுன் 22-ல் பன்னாட்டு கவியரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்த உள்ளது.

இந்த பன்னாட்டு கருத்தரங்கம் நிகழ்ச்சியில் விழா நிறைவுரையாற்றிடவும் கட்டுரை, கவிதை போட்டிகளில் சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கவும், தமிழ்ச் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கிடவும் வருகை தருமாறு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் முனைவர் பிச்சுமணி அவர்களுக்கு அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி,பொதிகை தமிழ்ச்சங்கம் சங்கம் சார்பில் கவிஞர் பேரா ஆகியோர் இணைந்து நேரில் சந்தித்து 20.05.19 இன்று அழைப்பு விடுத்தனர்.

இந்த அழைப்பை மகிழ்வுடன் ஏற்ற ம.சு.ப.துணை வேந்தர் பன்னாட்டு கருத்தரங்க நிகழ்வுகளில் பங்கேற்பதாக ஒப்புதல் அளித்தார். இந்ந சந்திப்பின் போது நெல்லை ம.சு. பல்கலைக் கழக நூலகத் துறை தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் மின்னல் அறக்கட்டளை நிறுவனர் மில்லத் இஸ்மாயில் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!