தமிழ்நாடு முதலமைச்சர் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆற்றிய விழா பேருரையை பார்வையிட்ட தென்காசி மாவட்ட ஆட்சியர்….

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து விழாப் பேருரை ஆற்றும் நிகழ்வை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் சிறு குறு நிறுவனங்களின் பிரதிநிதிகளோடு சேர்ந்து பார்வையிட்டார். தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் இந்த நிகழ்வில் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், தமிழ்நாடு அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை வர்த்தக மையத்தில் இன்று (07.01.2024) நடைபெற்று வரும் தமிழ்நாடு – உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து விழாப் பேருரை ஆற்றுகின்ற இந்த நிகழ்வை தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பார்வையிட்டார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!