குஞ்சார் வலசை ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குஞ்சார் வலசை ராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சர்வதேச யோகா தின விழா நடந்தது. ராஜா கல்வி நிறுவனங்களின் சேர்மன் சேவா ரத்னா டி.ராஜா தலைமை வகித்தார். இவ்விழாவில் அவர் பேசியதாவது, “கல்லூரி துவங்கிய முதல் ஆண்டிலேயே யோகா தினம் கொண்டாடுவதில் மகிழ்ச்சி. யோகா பயிற்சி செய்வதால் உடலில் நோய்கள் அண்டாது. டாக்டரை நாட வேண்டிய அவசியமில்லை“ என்றார்.

இந்நிகழ்வுக்கு ராஜா கல்வி அறக்கட்டளை டிரஸ்டி ஜெயந்தி ராஜா முன்னிலை வகித்தார். கல்லூரி செயலாளர் டாக்டர் தில்லை ராஜ்குமார் குத்து விளக்கேற்றினார். கல்லூரி துணை முதல்வர் சுப்ரமணியன்   வரவேற்றார். மேலும் கல்லூரி முதல்வர் வள்ளியம்மை அறிமுகவுரை ஆற்றினார். சர்வதேச யோகா வல்லுநர் என். பத்மநாபன், சர்வதேச யோகா போட்டியில் முதலிடம் பெற்ற யோகா மாணவி காமாட்சி ஆகியோர் யோகான சனங்கள் செய்து பாராட்டு பெற்றனர்.

தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் குமார்,  கல்லூரி உடற்கல்வி இயக்குநர்  மணிகண்டன், யோகா பயிற்றுனர் தங்க மோகன், ராஜா மெட்ரிக் பள்ளி முதல்வர் அண்ணாமலை மற்றும் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் பேராசிரியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியாக வேதியியல் துறை தலைவர் வீரபாண்டியன் நன்றி கூறினர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!