இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ் எம் பாக்கர் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்தவர் ஆவார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இருதய நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து சிறிது மீண்டு மருத்துவம் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில் முனைப்பாக ஈடுபட்டு வந்தார்.
இதற்கிடையில் பல மருத்துவ போராட்டங்கள் நடந்த போதிலும் அதை பொருட்படுத்தாமல் தன்னலத்தை தாண்டி சமுதாய நலனுக்காக ஈடுபட்டு வந்தார்.
சிறிது நாட்களுக்கு முன்னால் சென்னை வெள்ளத்தில் நிவாரண பணியில் ஈடுபட்டபோது காலில் காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு இருக்கக்கூடிய உடல் நிலையின் காரணத்தால் அந்த காயம் எளிதாக குணமடையவில்லை. அதற்கு கடந்த ஒரு சில மாதங்களாக மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே, நுரையீரலில் மீண்டும் நிமோனியா தொற்று ஏற்பட்டது.
இதை அனைத்தையும் மீண்டு கடந்து வந்து, உடனே மீண்டும் மார்க்க பணிகளில் ஈடுபட வேண்டும் என்று ரமலான் நேரங்களில் ரமலான் தொடர் சொற்பொழிவு செய்தார்கள். பல மருத்துவர்கள் அறிவுறுத்தியும், உடலை வருத்திக்கொண்டு சமுதாயப் பணிகளில் ஈடுபட்டதால், மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அன்னாரின் மறைவு அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
You must be logged in to post a comment.