தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடி நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு 22.04.19 இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெரியகுடி கிராமத்தை மையமாக வைத்து இருள் நீக்கி, விக்கிரபாண்டியம், ஆலத்தூர், புழுதுகுடி, கோட்டூர், சேந்தமங்கலம் , பள்ளிவர்த்தி, தண்ணீர் குன்னம் , 57, குல மாணிக்கம், சேந்தங்குடி,மாவட்டக்குடி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் சுமார் 27 கிணறுகள் உட்பட 40 இடங்களில் ஹைட்ரோகார்பன் எரிவாயு கிணறுகள் அமைத்துக் கொள்ள தற்போது சுற்றுசூழல் ஆய்வு அறிக்கை (Envior ment Impact Asessment Report) தயார் செய்ய மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ONGC நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
ஏற்கனவே 2013ல் பெரியகுடி கிராமத்தில் உரிய அனுமதி பெறாமல் தோண்டப்பட்ட கிணற்றில் கட்டுங்கடாது வாயு வெளியேறி பேராபத்து ஏற்பட்டு தடுத்து நிறுத்தியுள்ளோம்.
மேலும் அதன் அருகே விக்கிரபாண்டியத்தில் புதிய கிணறு அனுமதியின்றி அமைக்க முதற்கட்ட பணிகள் துவங்கிய போது தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம் அதற்காக எங்கள் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக பொய் வழக்கு போட்டு சம்பந்தம் இல்லாதவர்களை எல்லாம் வழக்கில் சேர்த்து 5 ஆண்டு காலமாக கீழ் நீதிமன்றத்திலேயே முழுமையான குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து மேல் கோர்ட்டு விசாரணைக்கு கொண்டு சென்று வழக்கை முடிக்காமல் திட்டமிட்டு காலம் கடத்தி சதி செயலில் ONGC நிர்வாகம் காவல்துறையை பயன்படுத்தி நீதிமன்றத்தையும் எங்களையும் அலைகழித்து மிரட்டி அச்சுறுத்தி வருகிறது.
இதனால் பயந்து விடுவோம் என்று நினைத்து தற்போது பெற்றுள்ள அனுமதியை பயன்படுத்தி ONGC புதிய கிணறுகளை அமைக்க முற்பட்டால் விடமாட்டோம். தீவிர போராட்டங்களில் களமிறங்குவோம் என எச்சரிக்கிறேன். தமிழக முதலமைச்சர் தலையிட்டு பொய் வழக்கை ரத்து செய்ய முன் வர வேண்டுகிறேன் என்றார்.அப்போது மாநில துணை செயலாளர் எம்.செந்தில்குமார், கோட்டூர் ஒன்றிய தலைவர் எஸ்.வி.கே.சேகர், செயலாளர் ராவனன், விக்கிரபாண்டியம் கிளை தலைவர் ராஜேந்திரன், சேந்தமங்கலம் சங்கர், செய்தி தொடர்பாளர் என்.மணிமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









