கொரானா வைரஸ் குறித்து மோசடி செய்பவர்களை பற்றி, சர்வதேச காவல் துறை (INTERPOL ) எச்சரிக்கின்றது..

மக்களிடையே நிலவி வரும் கொரானா வைரஸ் பற்றிய பயத்தை பயன்படுத்தி பிரபலமான நிறுவனங்களின் பெயரை ஒற்றி, முகக் கவசம் ,கை சுத்திகரிப்பான் மற்றும் மருந்துகள் ஆகியவற்றை ஆன்லைனில் விற்பதாக கூறி பண மோசடி செய்யும் கும்பல் செயல்பட்டு வருகிறது. மேலும் இ-மெயில் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் மக்களை தொடர்புகொண்டு கொரானா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவும்படி கூறி பணமோசடி செய்கின்ற செயலையும் அக்கும்பல செய்து வருகிறது.

மோசடிக்கும்பலின் இலக்கு ஆசியாவை சேர்ந்தவர்கள். பணிபரிவர்த்தனைக்கான இடமாக ஐரோப்பா நாடுகளின் வங்கிகளை பயன்படுத்திவருகிறார்கள் சுமார் 18 வங்கிகணக்குகளின் 7,30,300 அமெரிக்க டாலர்கள் பண பரிவர்த்தனைகளை சர்வதேச காவல்துறை மூலம் முடக்கி வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது, எனவே மக்கள் இத்தகைய செயலை குறித்து முன்னெச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடன் இருக்கும் படியும் சர்வதேச காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!