தேவகோட்டை அருகே ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளி சார்பாக சர்வதேச மகளிர் தின விழிப்புணர் ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி முதல்வர் அம்பிகா வரவேற்றார். சிவகங்கைத் தொகுதி எம்.எல்.ஏ.செந்தில்நாதன் தலைமை உரையாற்றி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். தேவகோட்டை செயின்மேரிஸ் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தியாகிகள் பூங்கா வரை ஊர்வலம் சென்றது. மகளிர் நலன்,குழந்தைகள் நலன், மாணவ மாணவிகள் நலன் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியும் கோஷமிட்டும் ஊர்வலம் சென்றனர். தேவகோட்டை நகர்மன்றத்தலைவர் சுந்தரலிங்கம் தொடக்க உரையாற்றினார்.தமிழ்நாடு மின் வாரிய செயற்பொறியாளர்(பணி நிறைவு) செல்லத்துரை ,தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தலைவர் பாலமுருகன், முனைவர் குமரப்பன் ஆகியோர் மகளிர் தின உரையாற்றினர். பள்ளி இயக்குனர் மணிமேகலை ஏற்புரை ஆற்றினார்.

You must be logged in to post a comment.