சென்னை சிறப்பு புத்தக காட்சியில் பாதி விலைக்கு புத்தகங்கள் – புத்தக பிரியர்கள் மகிழ்ச்சி

சர்வதேச புத்தக நாள் விழா ஆண்டு தோறும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் ‘சென்னை புத்தக சங்கமம்’ என்ற பெயரில் சிறப்பு புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது. வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நாளை ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாள்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

புத்தகக் கண்காட்சியை ஐ.என்.எஸ். அடையார் போர்க் கப்பலின் தலைமை அதிகாரி கேப்டன் ஜே.சுரேஷ் நாளை காலை 9 மணிக்கு தொடங்கி வைக்கிறார். தினமும் காலை 11 முதல் இரவு 9 மணி வரையும் விற்பனை நடைபெறுவதாகவும், இந்தாண்டு புத்தகம் வாங்குவோருக்கு 50 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புத்தக பிரியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோப்பு படம்

இந்த புத்தக கண்காட்சிக்காக 49 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அது தவிர பொது அரங்கு ஒன்றும் உள்ளது. இவற்றில் ஏராளமான பதிப்பாளர்கள், லட்சக்கணக்கான தலைப்புகளில் நூல்களை விற்பனை செய்ய உள்ளனர். இதற்கு நுழைவுக் கட்டணம் இல்லை. ஏடிஎம் வசதி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் புத்தகம் வாங்கும் வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன.

கண்காட்சிக்கு வரும் வாசகர்களில் தினமும் ஒருவரை தேர்ந்தெடுத்து செல்போன் பரிசு வழங்கப்பட இருக்கிறது. மேலும் கண் காட்சியின் ஒரு பகுதியாக உணவுத் திருவிழா, குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!