வட்டியில்லாத வங்கி நடைமுறைகளை விரும்ப கூடியவர்களுக்கான மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கூட்டுறவு அமைப்பாக ஜன் சேவா கூட்டுறவு சங்கம் இருக்கிறது. முற்றிலும் வட்டி இல்லாத நிலை, லாபத்தில் பங்கீடு மற்றும் சாமானிய மக்களின் பொருளாதார தேவைகளை சரி செய்து முன்னேற்றம் அடைய வழிவகைகளை செய்வது இந்த சங்கத்தின் முதன்மை நோக்கமாக கூறப்பட்டு இருக்கிறது.


கடந்த 2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது 7 மாநிலங்களில் 31 கிளைகள் செயல்படுகிறது. 21000 வாடிக்கையாளர்களை கொண்டு சுமார் 450 கோடி அளவிற்கு பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. மேலும் 40 கோடி அளவிற்கு புதிய தொழில்களை துவங்குவதற்கான கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இந்நிலையில் இன்று 11.03.17 இராமநாதபுரத்தில் இந்த ஜன் சேவா கூட்டுறவு சங்கத்தின் 32 வது கிளையின் துவக்க விழா நிகழ்ச்சி முஹம்மது சதக் வணிக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு சமுதாய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


It is great steps towards prosperity’s results I pray to almighty Allah gives very bright future insahallah
Good steps
What is the procedure in getting loan from this janseva??
சலாம்..
அன்பார்ந்த சகோதரரே, இது சம்பந்தமான மேல் விபரங்களுக்கு அவர்களுடைய இணையதளத்தை பார்க்கவும்…
http://www.janseva.in/contact-us.html