சிவகங்கையில் ரூ 89 கோடியில் ஒருங்கிணைந்த புதிய ஆட்சியர் அலுவலகம்.! தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு .!!
சிவகங்கை மாவட்டத்தில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நடும் பணியை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது விழா மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 6 துறை சார்பில் ரூ 164 கோடி மதிப்பிலான 33 திட்டங்களுக்கு அடிக்கல் நாடப்பட்டதாகவும், மேலும் ரூ 51 கோடியில் 45 முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்துள்ளதாகவும், ரூ 89 கோடியில் சிவகங்கையில் ஒருங்கிணைந்த புதிய ஆட்சியர் அலுவலகம் அமைக்கவும், திருப்பத்தூரில் ரூ 50 கோடியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கும், காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்ட ரூ 30 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் திமுக அரசு 505 வாக்குறுதியில் 389 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் எஞ்சிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றவர், முந்தைய அதிமுக அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
தமிழகத்தை பற்றாக்குறை மாறியமாக மாற்றியது முந்தைய அதிமுக அரசு என்றவர், பதவிக்காக டெல்லி சென்றவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும்,
திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதால் எடப்பாடி பழனிச்சாமி வயிற்று எரிச்சலில் உள்ளார் குற்றம்சாட்டினார். மேலும் ஒன்றிய அரசின் திட்டங்களை மாநில அரசின் நிதியில் இருந்து செயல்படுத்தி வருகின்றோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். முன்னதாக முதல்வர் ஸ்டாலினுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கீழடி தொல்லியல் மாதிரியை நினைவு பரிசாக வழங்கினார்.







You must be logged in to post a comment.