இன்ஸ்டால் பிரபலம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல்.!போலீசார் பிடித்து விசாரணை.!!

நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றவர்கள் மீது தொண்டி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என இன்ஸ்டால் பிரபலம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேல் தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல்: போலீசார் பிடித்து விசாரணை:

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த தொண்டி பகுதியை சேர்ந்து சபீனா இவர் வீட்டில் இருந்த  கடந்த சில மாதங்களுக்கு முன் 6/12 சவரன் தங்கம் மற்றும் 12 ஆயிரம் ரூபாய் திருட்டுப் போனதாக தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் தொடரபாக  எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலக மேல் மாடியில் இருந்து தற்கொலை செய்யப் போவதாக கோரி அந்த  பெண் கூச்சலிட்டு சத்தம் கேட்டது.

இதனையடுத்து காவல்துறையினர் அப்பெண்னை சாமர்த்தியமாக காப்பாற்றி கீழே அழைத்து வந்து கேணிக்கரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேல்மாடி தற்கொலை செய்வதாக முயன்ற நிகழ்வு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

தற்கொலைக்கு முயன்ற சபினா தான் ஒரு  இன்ஸ்டாகிராமில் இன்புளுன்சர்  என தொண்டி, திருவாடனை, ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகங்கள், டெக்ஸ்டைல்ஸ், வணிக  நிறுவனம் உள்ளிட்டவற்றுக்பு  இன்ஸ்டாவில் ப்ரோமோஷன் வீடியோ செய்து தருவதை வழக்கமாக கொண்டவர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம்  நகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வரும்  பிரியாணி கடை ஒன்றிற்கு ப்ரோமோஷன் வீடியோ செய்வதாக சென்றபோது  கடை  மேலாளர் தன்னிடம் தவறாக பேசியதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

ப்ரோமோஷன் வீடியோ செய்வதாக பலமுறை முதல் கடையின் உரிமையாளரை தொந்தரவு  செய்ததுடன் கடைக்கு அனுமதி இன்றி வந்து வீடியோ பதிவு செய்ததால் ஊழியர்கள் கடையை விட்டு வெளியே அனுப்பியதாக சபீனா மீது கடையின் மேலாளர் கொடுத்த சைபர் கிரைம் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது

தன்னை கடையின் மேலாளர் ஆபாசமாக பேசியதாக சபீனா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்திருந்தார்.

இவர் தான் இன்ஸ்டாகிராம் பிரபலம் எனக்கூறி பல இடங்களில் ப்ரமோஷன் வீடியோ எடுப்பதில் பிரச்சனை ஏற்பட்டு பல கடைகளில் சர்ச்சையில் சிக்ககுவதை சபீனா  வாடிக்கையாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!