இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் தொடர் மழையால் பாதித்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்
இன்று ஆய்வு செய்தார். கடலாடி வட்டம், எஸ்.தரைக்குடி ஊராட்சி செவல்பட்டி சாலையில் தேங்கிய தண்ணீர் பகுதிக்கு டிராக்டர் மூலம் மாவட்ட ஆட்சியர் சென்று பொதுமக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். நல்லான்பட்டி, வாலாம்பட்டி, முத்துராமலிங்கபுரம், வி.சேதுராஜபுரம், ராமலிங்கம்பட்டி, கொக்கரசன்கோட்டை பகுதிகளி தொடர் மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இப்பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற ஊரக வளர்ச்சித் துறை மூலம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அப்பகுதி மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து, வருவாய், வேளாண் துறை மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
அப்பகுதி மக்களுக்கு தேவையான உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாசிய பொருட்கள் தொய்வின்றி கிடைக்கவும்u அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அனைத்து பகுதிகளிலும் மருத்துவ முகாம் நடத்த சுகாதாரத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தினார்.
You must be logged in to post a comment.