இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் ஒன்றியம் பெருங்களூர் ஊராட்சியில் ரூ.2.97 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலையின் தரத்தன்மை குறித்து ஆய்வு செய்து சாலையின் இரு புறத்தையும் பலப்படுத்தி நன்கு அமைக்க வேண்டுமென பொறியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தினார். நயினார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு, ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் கணபதி சுப்ரமணியன், ஜெயந்தி உடனிருந்தனர்.

You must be logged in to post a comment.