ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே தாமோதரப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கடலோர காவல் படை சார்பு ஆய்வாளர் கதிரவன் தலைமையிலான காவலர்கள் வாகனங்களை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தொடர்ச்சியாக கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடல் அட்டை, வெடி பொருட்கள், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கடலோர பாதுகாப்பு படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சமீபத்தில் மாவட்ட எஸ்பி தலைமையில் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருள்கள் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இச்சோதனையில் சுமார் 8.061 கி.கி. குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு சட்ட விரோதமான பொருட்களை தடுக்கும் விதமாக திருவாடானை கடலோரப் பகுதிகளில் தீவிரமாக கடலோர பாதுகாப்பு படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
You must be logged in to post a comment.