பரமக்குடி வட்டார வளர்ச்சி பணிகள் அரசு செயலர் ஆய்வு..

இராமநாதபுரம், அக்.20 – 

இராமநாதபுரம்  மாவட்டம் பரமக்குடி வட்டார வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் முன்னிலையில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அர்ச்சனா பட்நாயக் ஆய்வு செய்தார். உரப்புளி ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணை அருகே வைகை ஆற்றின் கரை ஓரத்தில் பனை விதை நடும் பணியை துவக்கி வைத்தார். நென்மேனி கிராமத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு நீர்த்தேக்கத்தொட்டி கட்டுமானப்பணிகள், மேலப்பெருங்கரை கிராமத்தில் வேளாண் துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு,  ஊட்டச்சத்து இயக்கம் திட்டத்தின் கீழ் பயிர் திட்ட அடிப்படை செயல் விளக்க திடலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலப்பார்த்திபனூர் ஊராட்சி, மருச்சுக்கட்டி கிராமத்தில்  அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ஊரணி மேம்பாட்டு பணி, கதிரடிக்கும் களம் அமைக்கும் பணியை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களை அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!