இராமநாதபுரம், செப்.2- இராமநாதபுரம் வட்டாரம் புத்தேந்தல் ஊராட்சியில் மாதிரி கிராம திட்ட செயல்பாடுகளை சென்னை பல்துறை பணி திட்ட அலகு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு பாசன வேளாண் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வைகை உப வடிநிலப்பகுதி பகுதி I கீழ், ராமநாதபுரம் வட்டார வேளாண் துறை சார்பில் புத்தேந்தல் மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வேளாண் துறை தோட்டக்கலை துறை , வேளாண் பொறியியல் துறை , பொதுப்பணி துறை , (கீழ் வைகை உபவடி நிலப்பகுதி), கால்நடை பராமரிப்பு துறை, மீன் வளம், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் ஆகிய துறைகள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக அலுவலர்கள் தங்கள் துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
மாதிரி கிராம திட்ட செயல்பாடுகளை சென்னை, பொதுப் பணித்துறையின் கீழ் இயங்கும் பல்துறை பணிதிட்ட அலகு அலுவலர்கள் புத்தேந்தல் கிராமத்தில் கள ஆய்வு செய்து விவசாயிகளிடம் கலந்துரையாடினர். மாதிரி கிராம திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நுழைவு கட்டட பணிகளை பார்வையிட்டனர். தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்ட பல்துறை பணி அலகு வேளாண் நிபுணர் ஷாஜகான். செயற்பொறியாளர் சுப்பாராஜ், மீன் வள நிபுணர் பாலா சிங், சுற்றுச்சூழல் நிபுணர் ஜுதித் டி சில்வா ஆகியோர் அடங்கி குழு ஆய்வு செய்தனர். புத்தேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கோபிநாத், மாநில திட்ட வேளாண் துணை இயக்குநர் முருகேசன், பொதுபணித்துறை – கீழ் வைகை உபவடிநிலப் பகுதி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர். ஜெயதுரை, ராமநாதபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன், ராமநாதபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் புனித சுகன்யா, வேளாண் அலுவலர்கள் தமிழ், ரவிச்சந்திரன், உதவி வேளாண் அலுவலர் முத்துக்குமார், உதவி தோட்டக்கலை அலுவலர் இளவரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









