மீனவர் நல மாநாட்டு பணிகள் அமைச்சர்கள் ஆய்வு…

இராமநாதபுரத்தில் நாளை (ஆக.17) தென் மண்டல அளவிலான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம், ஆக.18ல் மண்டபம் முகாமில் மீனவர் நல சந்திப்பு மாநாடு நடைபெற உள்ளது. 

இதில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்நிலையில், மண்டபம் முகாம் கலோனியர் பங்களா மைதானத்தில் நடைபெற்றும் வரும் மீனவர் நல மாநாட்டு பந்தல் நிறைவு பணிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு (நிதி), ராஜகண்ணப்பன் (பிற்பட்டோர் நலம்), மீனவர் நலம், மீன்வளத்துறை ஆணையர் பழனிச்சாமி, காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். பேரூராட்சி தலைவர் ராஜா, மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திர ராமவன்னி, அரசு வழக்கறிஞர் முனியசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!