இராமநாதபுரம், ஆக.10- இராமநாதபுரம், அருகே பேராவூர் இசிஆர்., ல் திமுக பாக முகவர்கள் கூட்டம் ஆக.17ல் நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
விழா நடைபெறும் இடத்தில் ஆயத்த பணிகளை திமுக துணை பொதுச்செயலரும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான இ.பெரியசாமி, தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர், டிஐஜி துரை, எஸ்பி தங்கதுரை உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மாவட்ட திமுக செயலாளர் காதர்பட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, மாவட்ட திமுக பொருளாளர் முருகேசன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ முருகவேல், நல்லசேதுபதி, மாவட்ட கவுன்சிலர் வாசுதேவன், பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, மாவட்ட துணை செயலாளர் கருப்பையா உட்பட பலர் உடன் இருந்தனர்.


You must be logged in to post a comment.