மண்டபத்தில் மீனவர் சந்திப்பு மாநாடு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு: ஆயத்த பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்..

இராமநாதபுரம், ஆக.5 ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆக.17, 18ல்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிவதையொட்டி, மண்டபம் முகாம் கலோனியர் பங்களா அருகே ஆக.18ல் நடைபெறும் மீனவர் சந்திப்பு மாநாடு மேடை ஆயத்த பணிகளை, மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சி துறை ஐ.பெரியசாமி, பிற்பட்டோர் நலத்துறை, கதர்வாரிய தொழில் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வணிக வரி மற்றும்  பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி, ஆகியோர்  இன்று (05/07/2023) ஆய்வு செய்தனர். 

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், முதலமைச்சர் ஸ்டாலின் ராமநாதபுரம், மண்டபம் முகாம் வருவதை முன்னிட்டு ஆக.18ல் மண்டபம் முகாம் கலோனியர் பங்களா அருகே நடைபெறும் மீனவர் மாநாட்டில் கலந்து கொண்டு பேச உள்ளார். இங்கு விழா மேடை முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தோம். 13 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்க உள்ளார் என்றார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், ராமநாதபுரம், ராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர்கள் கார்மேகம், நாசர் கான், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா, செயல் அலுவலர் இளவரசி உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!