சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு…

சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஒவ்வொரு வகுப்பறையாக சென்று பார்வையிட்டார்.

அப்பொழுது ஒரு காலில் தடுப்புச் சுவர் இல்லாமல் தற்காலிக தடுப்பு அமைக்கப்பட்டதை அமைச்சர் அங்குள்ள ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.இதற்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாணவிகளிடம் குறைகளை கேட்டார்.இதில் மாணவிகள் விளையாட்டு மைதானம்,கூடுதலான கழிப்பறை வசதி உட்பட பல்வேறு பள்ளிக்கூட வசதிகளை அமைச்சரிடம் மாணவிகள் கேட்டனர்.இதைத் தொடர்ந்து இங்கு பணியாற்றும் ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்களிடம் மாணவர்களுடைய தேர்ச்சி குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து ஆசிரியர்களை பாராட்டினார்.

மேலும் மாணவிகளுக்கு மாலைநேர வகுப்புகள் நடத்தி மாணவிகளை ஊக்கிவித்து கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் கூறினார். இந்த திடீர் ஆய்வில் வெங்கடேசன் எம் எல் ஏ, பேரூராட்சி மன்றதலைவர் ஜெயராமன்,செயல் அலுவலர் சகாயஅந்தோணியூசின்,நகரச் செயலாளர் வக்கீல்சத்யபிரகாஷ், அவைத்தலைவர் ராமன்,மாவட்டபிரதிநிதி பெரியசாமி, திருவேடகம் ஒன்றிய கவுன்சிலர் வசந்தகோகிலாசரவணன் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆய்வின் போது உதவி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி மற்றும் ஆசிரியை, ஆசிரியைகள்,மாணவிகள் இருந்தனர். இந்த ஆய்வின் குறித்து தலைமை ஆசிரியர் அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வருகை புத்தகத்தில் தன்னுடைய கருத்தை எழுதி கையெழுத்து போட்டார்.செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!